முதியவரிடம் ரூ.65 ஆயிரம் கொள்ளை: கொசு மருந்து அடிக்க வந்திருப்பதாக கூறி நூதன திருட்டு..!!
Author: Aarthi Sivakumar6 October 2021, 12:45 pm
கோவை: குறிச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த 90 வயது முதியவரிடம் கொசு மருந்து அடிக்க வந்திருப்பதாகக் கூறி ரூ.65 ஆயிரத்தை திருடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (90). நேற்று மதியம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க இருவர் டெங்கு கொசு மருந்து அடிப்பதாக கூறி வந்துள்ளனர்.
மேலும், முதியவரிடம் ஆதார் கார்டு விபரங்களை கேட்டனர். இதனால், முதியவர் பீரோவிலிருந்து ஆதார் கார்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது ஒருவர் தண்ணீர் கேட்டதால், முதியவர் சமையலறைக்கு சென்றார். இதனையடுத்து, தண்ணீருடன் வந்தபோது அந்த இருவரையும் காணவில்லை.
மேலும், மேசையில் மீது ரூ.65 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வைத்திருந்த பர்ஸையும் காணாததால் அதிர்ச்சியடைந்தார். முதியவரின் அலறல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளை குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0