ஆன்லைனில் ஆர்டர்…சைக்கிளும் வரல…ரூ.1 லட்சம் பணமும் அபேஸ்: போலி இணையத்தில் மோசடி..சைபர் கிரைம் போலீசார் அட்வைஸ்..!!

Author: Rajesh
8 April 2022, 6:05 pm
Quick Share

கோவை: ஆன்லைனில் சைக்கிள் வாங்க முயற்சித்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த 93 ஆயிரம் ரூபாய் திருடு போன சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தது.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனியை சேர்ந்த சங்கேஷ் மனைவி லதிகா. இவர் தன் மகனுக்கு சைக்கிள் வாங்குவதற்காக ஆன்லைனில் தேடியுள்ளார். ஆன்லைன் இணையதளம் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சைக்கிளை தேர்வு செய்து அதற்கு முன்பணமாக ரூ.1699 கட்டுமாறு இணையதளத்தில் தெரிவித்திருந்தனர்.

அதன்படி 1699 ரூபாயை செலுத்தியும், குறிப்பிட்ட நாட்கள் கடந்தும் சைக்கிள் வரவில்லை. இதனையடுத்து இணையதளத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணில் அழைத்துப் பேசினர். அப்போது பேசிய வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி செலுத்திய முன்பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி லதிகாவின் ‘கூகுள் பே’ அல்லது ‘போன் பே’ எண் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டார்.

தான் அனுப்பும் மெசேஜில் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்றும், அதில் வரும் கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்க வேண்டும் என்றும் OTP வந்தால் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி செய்தபோது லதிகாவின் வங்கி வணக்கில் இருந்த 93,169 ரூபாய் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என்ற பெயரில் போனில் பேசிய மர்ம நபரால் எடுக்கப்பட்டு விட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த லதிகா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து, எஸ்.ஐ., முத்து வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் தண்டபாணி விசாரிக்கிறார். பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி இணையதளத்தில் குறைந்த விலைக்கு பொருள்கள் தருவதையோ, அல்லது பரிசு விழுந்ததாகக் கூறி நம்பவைத்து ஏமாற்றும் கும்பலிடம் இருந்து உஷாராக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 605

0

0