9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 தேதிகளில் பொது விடுமுறை!!

Author: Udhayakumar Raman
28 September 2021, 8:49 pm
TN Assemble 02 updatenews360
Quick Share

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபடர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குபதிவு 9ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6, 9 ஆகிய இரண்டு நாட்கள் பொது விடுமுறை தமிழக அரசு அளித்துள்ளது. மேலும் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அந்தந்த பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 101

0

0