‘பிரஸ் ID கார்டு வேணுமா’…பேஸ்புக்கில் கூவி கூவி விற்பனை: வசமாக சிக்கிய போலி பத்திரிக்கையாளர்கள்..!!

Author: Aarthi Sivakumar
4 October 2021, 4:12 pm
Quick Share

கோவை : பேஸ்புக் வாயிலாக பிரஸ் அடையாள அட்டைகள் தருவதாக விளம்பரப்படுத்திய நபர்கள் போலீஸ் வளையத்தில் சிக்கியுள்ளனர்.

latest tamil news

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளிடம் பிரஸ் அடையாள அட்டைகள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். ரவுடி பினு பிறந்தநாள் விழாவில் பங்கேற்று கைது செய்யப்பட்ட 70க்கும் மேற்பட்ட ரவுடிகளில் மூன்று பேரிடம் பிரஸ் பாஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பரபரப்பே குறையாத நிலையில், தற்போது பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், பிரஸ், மீடியா அடையாள அட்டை தேவைப்படுவோர் தங்களை அணுகலாம் என்று ஒரு மொபைல்போன் எண் வழங்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் இதேபோன்று பிரஸ், மீடியா அடையாள அட்டைகள் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, மொபைல்போன் எண்களை பதிவு செய்கின்றனர். இதை பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.

போலியாக அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட தகவல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலி அடையாள அட்டைகள் வைத்துள்ள நபர்கள் குறித்து விசாரிக்க, அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

மேலும், கோவையில் கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகை டிவி நிருபர்கள் என்ற பெயரில் பலர் உலா வருகின்றனர். இவர்கள் தங்களின் வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது மட்டுமின்றி போலி அடையாள அட்டைகள் வைத்து கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நிருபர் என்று கூறி பெரிய நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டியவர்கள், வீடியோ எடுத்து பணம் பறித்தவர்களை கோவை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 403

0

0