‘இப்படியெல்லாம் கூடவா கலப்படம் பண்ணுவீங்க’: பெட்ரோலுடன் தண்ணி மிக்ஸிங்…வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்க்..!!

Author: Aarthi Sivakumar
18 October 2021, 6:02 pm
Quick Share

விழுப்புரம்: திண்டிவனத்தில் பெட்ரோல் பங்கில் தண்ணீரில் பெட்ரோல் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பிஎம்எஸ் தனியார் பெட்ரோல் பங்க். தினமும் வழக்கமாக பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்கள் இன்று பங்கில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.

பங்க் வரைக்கும் பந்தாவாக வந்த வாகனங்கள் பெட்ரோல் போட்டு திரும்பும்போது கோளாறு செய்துள்ளது. வண்டியில் தான் ஏதோ கோளாறு என நினைத்த வாகன ஓட்டிகள் மெக்கானிக்குகளை நாடியுள்ளனர். வண்டியை பரிசோதித்த மெக்கானிக்குகள் பெட்ரோலை பிடித்த பார்க்க எல்லா வண்டியிலும் பெட்ரோல் தண்ணீர் கலந்து இருந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் நேராக பெட்ரோல் பங்க் முன் குவிந்தனர். அங்கு பெட்ரோல் போட காத்திருந்த வாகன ஓட்டிகளிடம் விவரத்தை எடுத்துக்கூறி, பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சண்டை போட்டுள்ளனர்.

இதனையடுத்து, பெட்ரோல் பங்கில் இருந்த பம்ப்பில் பெட்ரோலை கேனில் பிடித்துப் பார்த்துள்ளனர். அதில் பாதி பெட்ரோல் மற்றும் தண்ணீரை இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் பங்க் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் பங்கின் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எது எதில் தான் கலப்படம் செய்வது என்ற வரைமுறையின்றி பெட்ரோலிலும் கலப்படம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 199

0

0