கொடி கட்டி பறந்த விபச்சாரம்… சூட்கேஸில் நிர்வாணக் கோலத்தில் பெண் சடலம் : சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!!
Author: Babu Lakshmanan16 October 2021, 11:41 am
சேலம் : சேலத்தில் ஒரு வீட்டில் சூட்கேஸில் நிர்வாணக் கோலத்தில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமாரசாமிப்பட்டியில் சண்முகா அபார்ட்மெண்டில் பிரதாப் – தேஜ் மண்டல் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த அபார்ட்மெண்டின் ஓனர் நடேசனுக்கு போன் செய்த பிரதாப், தான் வேலை விஷயமாக சென்னையில் இருப்பதாகவும், தனது மனைவி தேஜ் மண்டலின் தொலைபேசிக்கு போன் செய்தால் எடுக்கவில்லை என்று பதற்றத்துடன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, நடேசனும் தேஜ் மண்டலின் வீட்டிற்கு சென்றார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததுடன், உள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால், சந்தேகமடைந்த நடேசன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரும், தாழ்ப்பாளை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் பரண் மீது ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது. அதில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த போலீசார், உடனடியாக, தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்ததும், போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தபோது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது.
சூட்கேஸில் இருந்தது தேஜ் மண்டல் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதாவது, முன்பு குடியிருந்த பகுதியில் தேஜ் மண்டல் பாலியல் தொழில் செய்து வந்ததாகவும், மற்றொரு பக்கம் மசாஜ் சென்டர்களையும் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. கடந்த மாதத்தில் பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் தேஜ் மண்டல் மீது விபச்சாரம் நடத்தியதாக வழக்குகள் பதிவாகியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், பாலியல் தொழில் விவகாரத்தில் ஏற்பட்ட ஏதேனும் தகராறில் தேஜ் மண்டல் கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1
1