கோவில் நிர்வாகி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற கன்னி திருடர்கள் : போலீசார் விசாரணையில் பகீர்…!!

Author: Babu Lakshmanan
21 December 2021, 7:30 pm
Quick Share

சேலம் : சேலத்தில் கோவில் நிர்வாகி வீட்டில் முதல்முறையாக கொள்ளையடிக்க முயன்ற 5 கன்னி திருடர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் கோவில் நிர்வாகியின் பங்களா ஒன்று உள்ளது. இந்த வீட்டில் சிலர் பதுங்கி இருப்பதைக் கண்ட காவலாளி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் பதுங்கியிருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும், முதல்முறையாக திருட வந்த போது மாட்டிக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 400

0

0