கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட சலூன் கடைக்காரர் வெட்டிப் படுகொலை : இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 10:10 am

கோவை : கோவையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சலூன் கடைக்காரரை அவரது நண்பர்களே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரத்தை அடுத்த தெலுங்குபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். பைனான்ஸ் தொழிலும் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சசிக்குமாரின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் அவரை வெளியே வரசொல்லி அழைத்துள்ளனர். அப்போது வெளியே வந்த சசிக்குமாரை, இருவரும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

சசிக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த செல்வபுரம் காவல்துறையினர் சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக செல்வ புரத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் சசிக்குமாரின் கடையில் ராம்ஜி மற்றும் இளங்கோவன் இருவரும் வாடிக்கையாக வந்து சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையிலே சசிகுமாரிடம் ராம்ஜி ரூ.5லட்சம் வட்டிக்கு பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பணத்தைத் திருப்பி கேட்ட சசிகுமாருக்கும் ராம்ஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!