மணல் கடத்தலில் பெண் காவலரை கதற விட்ட திமுக நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் : துரைமுருகன் அறிவிப்பு

16 July 2021, 1:29 pm
dmk arokkiyasamy - updatenews360
Quick Share

சென்னை : மணல் கடத்தலை கையும் களவுமாக பிடித்த பெண் காவலரை கதறவிட்ட திமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் ஆரோக்கியசாமி என்பவரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், தான் ஆளுங்கட்சியை சேர்ந்தவன் என்பதை காட்டி, போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களையும், கைது செய்யப்பட்ட நபர்களையும் மீட்டு வந்தார்.

மேலும், உயரதிகாரிகளின் அழுத்தத்தினால், ஆரோக்கியசாமியின் வாகனங்களையும், ஆட்களையும் மீண்டும் கைது செய்ய சென்ற பெண் டிஎஸ்பியை மிரட்டி, அவமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், திமுக ஆட்சியில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லையா..? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகதிருச்சி மத்திய மாவட்டம், மணப்பாறை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் S.ஆரோக்கியசாமியை கட்சியில் இருந்து நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 310

0

0

Leave a Reply