பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்கள் மீது சாணிக் கரைசல் : கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!!

13 April 2021, 10:22 am
Ambedkar Periyar Insult -Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : நாளை அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடும் வேளையில் பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்களுக்கு சாணி கரைசல் ஊற்றி மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூர் அம்பேத்கர் காலனியில் மின்மோட்டார் அறை உள்ளது. இந்த அறையின் சுவற்றில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்த நாளன்று இந்த இடத்தில் விழா கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் நாளை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டு வாழ்வதற்கான ஏற்பாடுகளை காலனி மக்கள் செய்து கொண்டுள்ளனர். அதற்காக பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்களை வண்ணம் தீட்டி புதுப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்களில் மேல் சாணியை கரைத்து ஊற்றி விட்டு தப்பி விட்டனர்.காலை வழக்கம்போல வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த அம்பேத்கர் காலனி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்து சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.

போலீசாரின் விசாரணையில் அம்பேத்கர் காலனியில் இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனையின் காரணமாக ஒரு தரப்பினர் படங்களுக்கு வர்ணம் பூசிய தாகவும் மற்றொரு தரப்பினர் நள்ளிரவில் படங்களின் மேல் சாணி கரைசல் ஊற்றி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Views: - 33

0

0