நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது.. கையில் தேசியக் கொடியை ஏந்தி போராட்டம் :திமுக அரசுக்கு கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2025, 11:15 am
சென்னை மாநகரம் உறங்கிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை, காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைகளில் தேசியக் கொடியை ஏந்தி, நியாயத்திற்காகக் குரல் கொடுத்தவர்கள், ஒரு நொடியில் “குண்டுக்கட்டாக” தூக்கப்பட்டு, நான்கு இடங்களில் பிரித்து அடைக்கப்பட்டனர்.

ஒவ்வொரு பணியாளரின் கையிலும் தேசியக் கொடி பட்டொளி வீசியது. “எங்கள் உழைப்புக்கு உரிய மரியாதை வேண்டும்!” என்ற அவர்களின் கோஷங்கள் வானை அளந்தன. ஆனால், இரவு காவல்துறையின் அதிரடி நடவடிக்கை ஆரம்பமானது.

போராட்டக்காரர்களும், காவலர்களும் மோதிக்கொண்டதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பரபரப்பு உச்சத்தைத் தொட்டது.இப்போது, கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சமூகநலக் கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நள்ளிரவு நாடகம் சென்னையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
