தூய்மை பணியாளர்கள் போராட்டம்… மாநகராட்சி நுழைவு வாயில் மூடல்.. போலீஸ் குவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2025, 12:48 pm

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், ்சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச்சம்பளமாக ரூ.26ஆயிரத்தை வழங்கிட வேண்டும், அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பதால் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் அனைத்து நுழைவாயில்களும் அடைக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளையும், முன் வைத்த கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் அவமதிக்கும், பழிவாங்கும் அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த நிலையில் மதுரை மாநாகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி வகுப்பு பகுதியில் ஒன்று கூடிய துப்புரவு பணியாளர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதுரை மாநகராட்சி அலுவலகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!