ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்ற சரத்குமார் தம்பதி: காஞ்சி கோவிலில் வழிபாடு!!

30 December 2020, 2:12 pm
Sarathkumar -Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் ஆருத்ரா வைபவத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை காண சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தனது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் உடன் வந்து அம்மனை தரிசனம் செய்தார்.

பின்னர் இருவரும் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். பேட்டியில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது அல்லது வேண்டாம் என்பது பற்றிய கருத்துக்களை நான் கூற விரும்பவில்லை. அவருடைய உடல்நலம், மனநலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் என்றார்.

சின்னத்திரையில் நடைபெறும் தற்கொலை சம்பவம் பற்றி கேட்டதற்கு ,சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியாக உள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் பிறகு பதில் அளிப்பதாக ராதிகா கூறினார்.

Views: - 1

0

0