அண்ணாமலை தமிழகம் ரிட்டர்ன்ஸ்… முதல் ஆளாக சம்பவம் செய்த சரத்குமார்!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2024, 9:06 pm

அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை நாளை தமிழகம் திரும்புகிறார். அவர் வருகை தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.

கடந்த 3 மாதங்களாக அண்ணாமலை இல்லாததால் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. இது அவருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

உதயநிதியின் அரசியல், விஜய் அரசியல் வருகை என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை அவர் எப்படி கையாளகப்போகிறார் என்பதை காண பாஜகவினர் ஆவலோடு இருக்கின்றனர்.

இதையும் படியுங்க: ரயில் வருமா? வராதா? கனமழையால் காட்பாடியில் 2 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு!

இந்த நிலையல் நாளை அண்ணாமலையை வருகையையொட்டி இப்போதே முதல் ஆளாக வாழ்த்தியுள்ளார் சரத்குமார்.

Annamalai return

அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
சர்வதேச அரசியல் குறித்து சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, சான்றிதழ் பெற்றதோடு, அங்கு இளம் மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களிடையே கருத்துச்செறிவு மிகுந்த உரைகளை ஆற்றி, கல்வி மற்றும் அரசியல் தொடர்பான சிறந்த அனுபவங்களைப் பெற்றுத் தாயகம் திரும்ப இருக்கும் தமிழக பாஜகவின் மாநிலத்தலைவர் அன்புச் சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களை உளமார வாழ்த்தி வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • Dhanush Upcoming Project Dropped தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
  • Views: - 90

    0

    0

    Leave a Reply