திருச்சியில் சசிகலா சுற்றுப்பயணம்: பல்வேறு ஆலயங்களில் சாமி தரிசனம்…அமமுகவினர் உற்சாக வரவேற்பு..!!

Author: Rajesh
11 April 2022, 4:17 pm

திருச்சி: சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் வி.கே சசிகலா தரிசனம் மேற்கொண்டார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தரிசனம் மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா இன்று திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் உள்ள மும்மூர்த்திகள் திருத்தலமான உத்தமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

வி.கே சசிகலாவை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் திரண்டு உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சிக்கு வருகை தந்த சசிகலாவிற்கு அ.ம.மு.க அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் மற்றும் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவன்,பிரம்மா,விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் வீற்றிருக்கும் உத்தமர்கோவில் திருத்தலத்தில் முன்னதாக பெருமாளை தரிசனம் செய்த பின்னர் தாயார் சன்னதி,சிவன் சன்னதி பிரம்மா,சரஸ்வதி உள்ளிட்ட சன்னதிகளில்
வி.கே சசிகலா தரிசனம் மேற்கொண்டார்.

இதே போல் திருவாசி அருகே உள்ள மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்,குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் வி.கே சசிகலா தரிசனம் மேற்கொண்டார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!