சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசம்? மறைந்த முன்னாள் எம்எல்ஏ வீட்டிற்கு திடீர் விசிட் : அமமுகவினர் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2021, 5:23 pm
Sasikala - Updatenews360
Quick Share

சென்னை : மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் இல்லத்திற்கு நேரில் சென்ற சசிகலா அவரது குடும்பத்தினரை சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.ம.மு.க.வின் முன்னாள் கழக பொருளாராக பொறுப்பு வகித்தவர் வெற்றிவேல். அக்கட்சியில் முக்கிய நபராக அனைவராலும் பார்க்கப்பட்டார். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மேலும் , சசிகலா சிறையில் இருந்த போது டிடிவி தினகரனுக்கு பக்க பலமாக இருந்து அனைத்து பணிகளையும் செய்தவர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் , வெற்றிவேல் மறைந்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் , சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள வெற்றிவேலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரை சசிகலா நேரில் சந்தித்தார். வெற்றிவேல் இறப்பின் போது சசிகலா சிறையில் இருந்தது நினைவுகூரத்தக்கது.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ள நிலையில் அமமுக பிரமுகர் வீட்டிற்கு விசிட் அடித்த சம்பவம் அமமுக கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 300

0

0