சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் எஃப்ஐஆர் நகல் ஒப்படைப்பு

11 November 2020, 5:11 pm
sathankulam case - updatenews360
Quick Share

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, காவல்துறையின் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 10பேரை சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீதியுள்ள 9பேரும் சிறையில் உள்ளனர்.

இதனிடையே, வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்திய நிலையில் குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் சமர்பித்தனர். இதைத் தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த வழக்கை, மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, சிறையிலுள்ள 9 பேருக்கும் சம்மன் அளிக்கப்பட்ட நிலையில், இன்று காவல்துறை பாதுகாப்புடன் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி வடிவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டனர்.

இந்த நிலையில், 9 பேரிடமும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2027 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பிறகு, வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் கேட்கப்பட்டபோது, ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் சுதந்திரமாக இருக்க விடவில்லை எனவும், சிறையில் முதல் வகுப்பு வசதி கேட்டும், வழக்கறிஞரை சந்திக்க அனுமதி கேட்டும் முறையிட்டார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Views: - 20

0

0

1 thought on “சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் எஃப்ஐஆர் நகல் ஒப்படைப்பு

Comments are closed.