சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு : 6 மாதத்தில் வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
18 March 2021, 1:18 pm
Quick Share

மதுரை : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கை 6 மாதத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவருடை மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் தாக்கியதில் இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களின் உயிரிழப்புக்கு காரணமான 10 போலீசார் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டனர். அவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், 9 பேரின் மீதான விசாரணை தொடர்ந்து வருகிறது.

பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன் பிறகு, சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டியிலும் விசாரணையை நடத்தி முடித்து விட்டது. விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 89

0

0