எஸ்.பி.ஐ. டெபாசிட் ஏடிஎம் நூதன கொள்ளை வழக்கு :4வது கொள்ளையன் கைது

Author: Udhayakumar Raman
2 July 2021, 12:31 am
Quick Share

சென்னை: சென்னையில் எஸ்.பி.ஐ. டெபாசிட் ஏடிஎம் நூதன கொள்ளை வழக்கில் 4வது கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் எஸ்.பி.ஐ. டெபாசிட் ஏடிஎம் நூதன கொள்ளை வழக்கில் 4வது கொள்ளையன் கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் பதுங்கியிருந்த கொள்ளையன் சவுகத் அலியை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சென்னை அழைத்து வருகின்றன. டெபாசிட் ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஏற்கனவே அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத், நசீம் உசேன் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா, தமிழகம், புதுச்சேரி உட்பட 4 மாநிலங்களில் ஹரியானா ஏடிஎம் கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டனர். இதனிடையே வீரேந்தர் ராவத்தை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ரூபாய் 1 லட்சம் தருவதாக அமீர் அர்ஷ் கூறினார். ஏடிஎம்களில் பணம் கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல பைக் ஓட்ட உதவியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Views: - 385

0

0