பள்ளி வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி : சடலத்தை எடுக்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 1:03 pm

திருப்பூர் பாராபாளையம் பகுதியைச் சேர்ந்த ராதா. இவர் காலையில் பள்ளியில் குழந்தையை விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார் .

குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிச் சென்றபோது திருப்பூர் கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் உள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி அருகே அந்த பள்ளியின் வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் பலியான ராதாவின் உறவினர்கள் அங்கு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் உரிய நியாயம் வேண்டும் என்றும் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் சடலத்தை அப்புறப்படுத்த விடாமல் போலீசாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வாகன ஓட்டுனர் கைது செய்ய வேண்டும் , பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பிரேதத்தை பிரதே பரிசோதனைக்காக எடுத்த செல்ல அனுமதித்தனர்

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!