தனியார் பள்ளி தாளாளரை கடத்திய ஆசிரியர்.. தருமபுரியை அதிர வைத்த சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2024, 7:56 pm

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரத்தை சேர்ந்தவர் செம்முனி (68). தனியார் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், சேலம் திருமணிமுத்தாறு பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனராகவும் உள்ளார்.

இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகி துறவியாகியுள்ளார். இவருக்கு சித்தேரி பேரேரி புதூர் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த இனியவன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

செம்முனி நடத்தி வரும் தனியார் பள்ளி நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து ₹15 லட்சம் பெற்றுக் கொண்டு ஒப்பந்தஅடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர் இனியவன் தாயார் அமிர்தவள்ளிக்கு, தனியார் பள்ளியை கடந்த ஆண்டு (2023) ஜூன் முதல் நடத்திக் கொள்ள எழுதி கொடுத்துள்ளார்.

மேலும் பள்ளியில் வரும் லாபத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என செம்முனி கூறியுள்ளார். இந்த பள்ளியில் தற்போது 101 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் பள்ளிக்கு அங்கீகாரத்தையும் செம்முனி பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து இனியவன் தாயார் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் தராததால், ஏ.பள்ளிப் பட்டி போலீசில் அமிர்தவள்ளி கடந்த நவம்பர் 18ம் தேதி புகார் கொடுத்தார். அன்று முதல் செம்முனி விசாரணைக்கு வராமல் இருந்துள்ளார்.

இதையும் படியுங்க: ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இந்நிலையில் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி சாய்பாபா கோயிலில் செம்முனி சாமி கும்பிட்டுவிட்டு அங்கு பேசிக் கொண்டு இருந்தார். அப் போது இனியவன் உள்ளிட்ட 6 நபர்கள் அங்கு சென்று, செம்முனியை தாக்கி காரில் கடத்திச் சென்றனர்.

இது பற்றி சாய்பாபா அறக்கட்டளை தலைவர் பன்னீர்செல்வம், பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று காரில் கடத்தப்பட்ட செம் முனியை தேடினர்.

Dharmapuri Incident

அரூர்- சேலம் நெடுஞ் சாலையில் புதுப்பட்டி சுங்க சாவடி பகுதியில் சென்றவர்களை விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். இதையடுத்து இனியவன் (41), மருக்காலம்பட் டியை சேர்ந்த தீர்த்தகிரி (45), அம்பேத்குமார் (41), சுரேஷ் (29), மனோஜ்குமார் (29), மூக்காரெட்டிப்பட்டியை சேர்ந்த யசேந்திரன் ஆகிய 6பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!