சிறுமியை காதலிப்பதாக கூறி பல முறை உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 11:31 am

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஆண்டிபட்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சிறுமியை ஆசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை ஒரு சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தியதில் அந்தச் சிறுமியை விமல் என்பவர் காதலித்து அந்த சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்து சிறுமியை மிரட்டி தனது ஆசாரிபட்டி ஊரில் உள்ள நண்பர்கள் ஏழு பேருடன் சிறுமியை தகாத உறவு கொள்ள வைத்ததும் தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சிறுமி கற்பம் அடைந்த நிலையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: வீட்டுக்கு அடிக்கடி வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. வயிற்று வலியால் தவித்த +2 மாணவி : பாய்ந்தது போக்சோ!

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த விமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற ஏழு பேர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!