பப்ஜி கேம் பஞ்சாயத்து.. மன உளைச்சலில் சிறுவன்.. விரக்தியல் எடுத்த முடிவு…

6 August 2020, 3:05 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பப்ஜி விளையாடும் ஏக்கத்தில் பள்ளி மாணவன் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக குருசிலாபட்டு  போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்..

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் தினேஷ்குமார் (15). மிட்டூர் அரசு பள்ளியில் 9 வகுப்பு முடித்துவிட்டு 10 வகுப்பு சென்ற நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று இலவச பாடப்புத்தகம் வாங்கி வந்துள்ளான்.

இந்நிலையில்  கடந்த  சில மாதங்களாக  இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன்  பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர். இதனை கண்ட தினேஷ்குமார் தனக்கும்  செல் போன் வாங்கி தரும்படி பெற்றோர்களிடம்  கேட்டுள்ளார். அவர்கள் வாங்கி தர மறுத்துள்ளனர். 

இதனால் இனி பப்ஜி விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் வீட்டுற்க்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில்  தனது தாயின் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளான்.
இது குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த குரிசிலாப்பட்டு போலிசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றுவது இது போன்ற திடீர் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடும் என மன நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.