கொரோனா தடுப்பூசி செலுத்திய பள்ளி மாணவி திடீர் மயக்கம் : பதறியடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆசிரியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2022, 4:20 pm
Vaccine Student Dizzy - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தடுப்பூசி போட்டு கொண்ட மாணவி மயக்கமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவல் காரணமாக 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருப்பதால், அவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 392 பள்ளிகளில் 30275 தகுதியான மாணவர்கள் மாணவிகள் உள்ளனர், இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது..
இதேபோல், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களாக மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று காலையிலும் வழக்கம்போல் மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அப்போது, தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவி ஒருவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பதட்டமான சூழல் உருவானது. உடனடியாக, அங்கிருந்த ஆசிரியை ஒருவர் மாணவியை கைத்தாங்கலாக தூக்கி அவரை ஆசுவாசப்படுத்தினார்.

பின்னர், அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். அந்தப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட இருந்த நிலையில், மாணவி மயக்கமடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது..

தற்போது மாணவி சிகிச்சை பெற்று பள்ளிக்கு திரும்பியுள்ளார் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே மாணவிகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது என பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார். இதனை கண்ட சக மாணவிகள் பீதியடைந்தனர்.

Views: - 388

0

0