புதுச்சேரியில் செப்.,1 முதல் பள்ளிகள் திறப்பு : ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் இயங்கும்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 5:49 pm
Pondy School - Updatenews360
Quick Share

புதுச்சேரி : பள்ளி கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெற்றது. கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடைபெறும் என கூறிய முதலமைச்சர் ரங்கசாமி, தமிழக அரசின் பாடத்திட்டத்தை புதுச்சேரி பின்பற்றுவதால் கல்வித்தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு பின்பற்றுகின்றது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் வரும் 26ந்தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அன்றைய தினம் மாலையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Views: - 351

0

0