பள்ளிகளில் 1ம் வகுப்பு குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம்: ஆனா ஒரு கண்டிஷன்..!!

Author: Aarthi Sivakumar
7 October 2021, 6:02 pm
Quick Share

சென்னை: 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்றால் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

மேலும், 1ம் வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எப்படி முககவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும். ஆகவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து உடன் இருக்கலாம்.

குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வருகிறதோ, அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Views: - 250

0

0