தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு…!!
Author: Aarthi Sivakumar1 November 2021, 9:23 am
சென்னை: தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
கொரோனா தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியவுடன் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக செப்டம்பர் மாதத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
அந்தவகையில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது.
இன்று முதல் 15 நாட்களுக்கு மாணவர்களுக்கு கதை, பாடல், ஓவியம் என மனமகிழ்வு செயல்பாடுகளை முதல் கட்டமாக ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று பள்ளிக்கு வருகை தந்தை மாணவர்களை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பேண்ட வாத்தியங்கள் முழங்கவும், இனிப்புகள் வழங்கியும், பூக்கள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
0
0