ஓட ஓட செல்போன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு : பட்டப்பகலில் திண்டுக்கல்லில் பயங்கரம்!!

By: Udayachandran
15 September 2021, 8:17 pm
Natham Murder Attempt -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பட்டப்பகலில் செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளரை மர்ம நபர்களால் வெட்டிக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

திண்டுக்கல் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான் பாபு( வயது 35) இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார் இதனிடையே இன்று மதியம் கடையில் இருந்து வேலை விஷயமாக சட்டாம்பிள்ளை தெரு பகுதியில் நடந்து வந்தார்.

அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மறித்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மீரான் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் வாலிபரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை உதவியுடன் தேடி வருகின்றனர்.

கொலை முயற்சி சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கொலை முயற்சி சம்பவம் நடந்தது திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

Views: - 242

0

0