புரோக்கர் கமிஷன் தராமல் இழுத்தடித்த திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : கணவர், மகனையும் விட்டுவைக்காத கும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2023, 10:37 am

புரோக்கர் கமிஷன் தராமல் இழுத்தடித்த திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : கணவர், மகனையும் வெட்டி தப்பியோடிய கும்பல்!!

கோவை மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்தவர் சித்ரா (44). 3 ஆவது வார்டு திமுக கவுன்சிலர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்த போது, திடிரென முகக்கவசம் அணிந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா அவரது கணவர் ரவிக்குமார் (வயது 47), மகன் மோகன் (வயது 24) ஆகியோரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து படுகாயங்களுடன் இருந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சித்ரா 3.5 செண்ட் நிலம் வாங்கியதாகவும், ஆனால் அதற்கான புரோக்கர் பணம் கொடுக்காமல் சித்ரா காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரை ராஜா (வயது 24) என்பவர் மேலும் 4 பேருடன் சேர்ந்து சித்ராவின் வீட்டிற்கு வந்த பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டதோடு, அவர்களை அரிவாளால் வெட்டிச் சென்றது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் இருந்து அரிவாள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பிச்சென்ற ராஜா உள்ளிட்ட 5 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!