சூலூர் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஒத்திகை : குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!!

By: Udayachandran
2 August 2021, 3:48 pm
Ramnath Govind- Updatenews360
Quick Share

கோவை : சூலூர் விமானப்படை தளத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை சென்னையிலிருந்து விமானம் மூலம் சூலூர் படைத்தளம் வந்தடைந்து பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி செல்ல உள்ளார்.
இதனையடுத்து சூலூர் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் விமானப்படை தளத்தை சுற்றியும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள் ராணுவ விமானங்கள் மூலம் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் வரும் போது வானிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டால் தரைவழியாக நீலகிரி செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குடியரசு தலைவர் செல்லக்கூடிய வாகன வழி பாதைகளில் சோதனையானது நடைபெற்றது.

ராணுவ வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து பாதுகாப்பு சோதனை நடைபெற்றது. இதில் 41 ராணுவ வாகனங்கள் பங்கேற்றன.இதற்கு முன்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி உள்ளிட்டோர், ராணுவ அதிகாரிகளிடம் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

Views: - 183

0

0