7 முறை கருக்கலைப்பு செய்தேன் என்றால் அது சாதனையே.. சோளக்காட்டில் அப்படி.. சீமான் பரபரப்பு பேச்சு!

Author: Hariharasudhan
28 February 2025, 1:17 pm

நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? எனக் கேள்வியெழுப்பிய சீமான், அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே எனக் கூறியுள்ளார்.

தர்மபுரி: நடிகை அளித்த பாலியல் புகாரின் கீழ், போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பும் வகையில், அவரது வீட்டில் சம்மனை ஒட்டினர். இதனை, சீமான் வீட்டின் பாதுகாவலர் கிழித்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது போலீசுக்கும், காவலாளிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, தான் ஆஜராகுவதாக கூறியிருக்கும் நிலையில், ஏன் சம்மன் ஒட்டி கைது செய்ய வேண்டும் என ஓசூரில் நேற்று சீமான் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், இன்று தான்தான் சம்மனைக் கிழிக்கச் சொன்னதாகவும், தன்னைக் கைது செய்ய வேண்டியதுதானே என்றும் சீமானின் மனைவி கயல்விழி இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிலையி, தர்மபுரியில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Seema Dharmapuri Speech

அப்போது பேசிய சீமான், “கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்று தேர்தலில் போட்டியிட்டுப் பார்க்கலாம். 2026 தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம். ஒரு ஆண்டுக்குள் 7 முறை கருக்கலைப்பு செய்தது நானாகத்தான் இருக்கும். அதுவும் சிறைக்குள் இருந்துகொண்டே கருக்கலைப்பு செய்திருக்கிறேன்.

நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே. ஓராண்டில் ஏழு முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளரும் நான்தான். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல்துறை மனதில் வைக்க வேண்டும்.

சம்மனைக் கிழிக்காமல், காவல்துறை அளித்த சம்மனை பூஜை அறையிலா மாட்ட முடியும்?. காலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது? சம்மனைக் கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? சம்மனைக் கிழிப்பதும், கிழிக்காமல் இருப்பதும் எங்கள் விருப்பம்.

இதையும் படிங்க: ’கலெக்டர் நான் சொல்றதத்தான் கேட்கனும்..’ திமுக நிர்வாகி பேசியதாக வெளியான ஆடியோ.. அண்ணாமலை கேள்வி!

விசாரணைக்கு வர மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லையே. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும், சம்மனை வீட்டில் ஒட்டச் சென்றது ஏன்? என்னோடு மோதி வெற்றி பெற முடியாததால் இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். எவ்வளவோ மக்களின் பிரச்னைகள் உள்ளன.

எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் நான் பயப்பட மாட்டேன். அதிகாரம் நிலையானது என நினைத்துச் செயல்பட வேண்டாம். வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. என்னமோ, கல்லூரில படிச்சுட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் கற்பழிச்சுவிட்ட மாதிரி பேசுறாங்க” எனத் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!