வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு துணை நிற்பது நமது கடமை..! சீமான் ஆதரவு

16 August 2020, 1:13 pm
Seeman 01 updatenews360
Quick Share

சென்னை: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு துணை நிற்பது நம் அனைவரின் கடமை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு விலை உயர்ந்த வெளிநாட்டு இரு சக்கர வாகனம் ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே  அமர்ந்திருக்கும் போட்டோ வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். நீதிபதி ஏன் ஹெல்மெட் அணியவில்லை, முகக்கவசமும் எங்கே என்று கேட்டிருந்தார்.

அவரது  இந்த கருத்தையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன் வந்து உச்சநீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது. வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்றும், அவருக்கு என்ன தண்டனை என்று வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந் நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்ட கருத்துரிமை, 1947க்கு பிறகான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் பெயரளவிலேனும் நிலை நாட்டப்பட்டதாக நம்பிக்கொண்டருந்த வேளையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு தண்டனை விரும்பத்தகாத ஒன்று.

நீதித்துறை மீதான எண்ணற்ற இளையோர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பிராசந்த் பூசண் அவர்களோடு துணை நிற்பது சனநாயகத்தின் மீதும், அதனை அங்கீகரிக்கும் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை.

இதுவரை ஏழைகளின் குரலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாகவும் வலம் வந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்கள் மேலும் உறுதியோடு இயங்க, நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை என்று தெரிவித்துள்ளார்.

Views: - 67

0

0