துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.11 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்…!!

3 November 2020, 5:34 pm
gold smugli - updatenews360
Quick Share

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.11 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய சில நபர்களிடம் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது 1.11 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதாக ஷாகுல் ஹமீது என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 1.11 கிலோ தங்கத்தின் மதிப்பு 58.6 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 19

0

0