ஆரணியில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்: 12 உணவகங்களில் அதிரடி சோதனை… 15 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!!

Author: Aarthi Sivakumar
11 September 2021, 5:32 pm
Quick Share

திருவண்ணாமலை: ஆரணியில் உணவகம் ஒன்றில் பிரியாணி உண்ட சிறுமி உயிரிழந்த நிலையில், 12 உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன சிக்கன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆரணியில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணி உண்ட சிறுமி திடீரென உயிரிழந்தார். மேலும், பிரியாணி சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உடல் நல பாதிப்புகளுக்கு காரணமான உணவகத்தின் உரிமையாளர், சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டு ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சிறுமி உயிரிழந்த நிலையில் பிற உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கெட்டுப்போன சிக்கன்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆரணி முழுவதும் 12 உணவகங்களில் நடத்திய அதிரடி சோதனையில் 15 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நம்பி உண்ணும் உணவகங்களில் அதிக லாபத்திற்காக இதுபோன்ற கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்ததற்கு 10 வயது சிறுமி பலியாகியுள்ளார்.

Views: - 259

0

0