மினி லாரியில் கடத்தி வந்த 760 மதுபான பாட்டில்கள் பறிமுதல்: இரண்டு பேரை கைது செய்து விசாரணை

21 June 2021, 10:14 pm
Quick Share

சென்னை: புழல் அருகே போலீசாரின் வாகன சோதனையில் மினி லாரியில் கடத்தி வந்த 760 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புழல் கதிர்வேடு பைபாஸ் சாலையில் புழல் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியினை மடக்கி சோதனையிட்டபோது, அதில் 760 மதுபான பாட்டில்களை பதிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து மதுபான பாட்டில்களை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் வெங்கடேசன் மற்றும் கிளீனர் கார்த்திக் இருவரை கைது செய்து புழல் காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் இயங்காததால் விற்பனைக்காக கொண்டு செல்வதற்காக மதுபாட்டில்களை வாங்கி மினிலாரியில் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 153

0

0