குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் : 3 பேர் கைது
Author: kavin kumar11 January 2022, 8:04 pm
தருமபுரி: தருமபுரி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்க்கள் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து தருமபுரி வழியாக பல்வேறு இடங்களுக்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெங்களுரிலிருந்து கடத்தி வந்த குட்கா பொருட்களை தருமபுரி அருகே தடங்கம் பகுதியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தருமபுரி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.
அதில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 900 கிலோ எடையுள்ள 40 மூட்டை குட்கா பொருட்களை கைப்பற்றினர். இந்த கடத்தலில் ஈடுபட்ட நூலஅள்ளி பகுதியை சேர்ந்த பிரபாகரன் (21) அவரது தந்தை நரசிம்மன் மற்றும் அவரது நண்பர் மனோஜ் (22) ஆகிய மூவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது அதியமான் கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தருமபுரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
0
0