திமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக செயல்படுகிறது.. செல்லூர் ராஜு விமர்சனம்..!

Author: Vignesh
27 July 2024, 1:39 pm

திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி கிடையாது, திமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக செயல்படுகிறது என மதுரையில் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் தெற்கு தெருவில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 10 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு பேசுகையில் “மக்களை ஏமாற்றவே திமுக மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்க்கு எதிராக போராட்டம் நடத்துகிறது.

திமுக சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறது, மக்கள் நலனை பார்க்காத திமுக குடும்ப நலனை மட்டுமே பார்க்கிறது, 40 எம்.பி க்கள் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்தார்களா?, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் என மக்களிடம் நாடகமாடுகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் தான் நீட் வந்தது, திமுகவினர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டம் செய்தார்களா?, கச்சத்தீவு, காவிரியை மீட்டெடுத்திருக்கலாமே, மக்கள் பிரச்சனையை விட்டு விட்டு செங்கோலை பற்றி பேசுகிறார் சு.வெங்கடேசன், எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ திட்டத்தைப் பற்றி பேசவில்லை, மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நடத்தும் நாடகம், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அம்மா உணவகம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிற மாநிலங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது, அம்மா உணவகங்கள் உட்பட அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் உயர்க்கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டது, திமுக ஆட்சியில் எத்தனை உயர்க்கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டது, சீன பழமொழி “மீனை சுட்டு கட்டுவதை விட பிடிக்க கற்றுக் கொடுப்பது தான் சிறந்தது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அது போன்ற திட்டங்களை செய்தார், அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னிலையில் இருந்தது, மூன்று வருடமாக அம்மா உணவகத்திற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை.

அதேபோல் கூட்டுறவுகளில் தான் பருப்பு காய்கறி வழங்கப்பட்டது, 2000 அம்மா மினி கிளினிக்கை முடக்கி விட்டனர், எடப்பாடி பழனிச்சாமிதை
நீதிமன்றம் பொது செயலாளராக எற்றுக் கொள்கிறதோ, இல்லையோ, தொண்டர்களும், மக்கள்களும் பொது செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள், அதிமுக மட்டுமே ஜனநாயக இயக்கமாக செயல்படுகிறது.

திமுகவில் உயர் பதவிகளுக்கு வாரிசுகள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும், திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி கிடையாது, திமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக செயல்படுகிறது, திமுக கம்பெனி மேனேஜராக ஸ்டாலின் செயல்படுகிறார், பின்னர் உதயநிதி, இன்பநிதியும் மேனேஜர் பதவிக்கு வருவார்கள், திமுக எதிர்க்கட்சி என்றால் கருப்புக்குடை பிடிக்கிறது, ஆளும் கட்சி என்றால் வெள்ளை குடை பிடிக்கிறது, நடிகர் விஜய் முதலில் கட்சி தொடங்கட்டும், அவரின் செயல்பாடுகள் அப்புறம் பார்க்கலாம்” என கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?