விஜய்யால் எங்களுக்குத்தான் லாபம்.. சின்னப்பையனை வளர விடுங்க ; செல்லூர் ராஜூ விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 2:28 pm

சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வளர்மதி தலைமையில் மதுரை நேதாஜி சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில்: அண்ணாமலையை விமர்சித்ததை கண்டித்து பாஜக மதுரை மாவட்ட தலைவர் விடுத்த கண்டன அறிக்கை தொடர்பான கேள்விக்கு, “அண்ணாமலையை பற்றி நான் விமர்சிக்கவில்லை. பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தொண்டர்களை பார்த்து என்னப்பா ஆட்டுக்குட்டி மாதிரி தலையாட்டுகிறீர்கள் என்று தான் கேட்டேன். நாங்கள் போருக்கு போகிறோம், எலி பிடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்

ஓ.பி.எஸ். டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு, “ஓ.பன்னீர்செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர். அவரைப் பற்றி பேச வேண்டியதில்லை”

நடிகர் விஜயின் அரசியல் மாநாடு குறித்த கேள்விக்கு, விஜய் இப்போது தான் மாநாடே நடத்த போகிறார். அதிமுக வேறப்பா… திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அதுபோன்ற எழுச்சி தம்பி விஜய்க்கு இருக்குமா என தெரியாது.

விஜய் நிறைய இளைஞர்களை வைத்துள்ளார். ஆனால், மாநாட்டில் கொள்கை அறிவித்த பின்னரே விஜய்யை மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது தெரியவரும்.

அதிமுகவுக்கு விஜயை பார்த்து பயமே இல்லை. விஜயின் கட்சியில் முழுக்க முழுக்க திமுக உறுப்பினர்கள் தான் உள்ளனர். அதனால் தான் திமுக தலைவர்கள் விஜயை விமர்சிக்கிறார்கள். பாவம் சின்னபையன் விஜய், அவரும் வளர வேண்டாமா.

நேற்று வரை நடிகைகளுடன் ஆடிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குகிறீர்கள், விஜய் வருவதை ஏன் தடுக்கிறீர்கள்? எங்களுக்கு பாதிப்பே இல்லை. விஜய் கட்சியினால் அதிமுகவுக்கு லாபம் தான். திமுகவில் உழைக்கிற சில இளைஞர்களும் தவெக-வுக்கு சென்று விடுவார்கள். திமுகவில் முழுவதும் சீனியர் சிட்டிசன்கள் தான் இருப்பார்கள் என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!