செல்லூர் ராஜூ எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யணும்.. அவருக்கு எதிரா ஓட்டு போடுவோம் : முன்னாள் கர்னல் பேட்டி!
Author: Udayachandran RadhaKrishnan14 May 2025, 5:48 pm
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சிடி அரசு மதுரையில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, பாகிஸ்தான் தொடர்ந்து பல தாக்குதல் நடத்துவறதுக்கான தகவல்கள் கிடைத்த உடனே இது ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நமது நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சகம் பிரதம மந்திரி நரேந்திர மோடி எடுத்த முடிவின்படி சிந்தூர் ஒன்றுக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது அப்பவே பாகிஸ்தான் மன்னிப்பு கேட்டிருக்கலாம்.
அதனால் தீவிரவாதிகள் பயிற்சி மையங்கள் அவர்களுடைய தங்கும் இடங்கள், ஆயுதக் கிடங்குகள் அழிப்பது தான் நம்மளுடைய நோக்கம் பாகிஸ்தான் மீது நாம் போர் தொடுப்பது நமது நோக்கம் அல்ல. தீவிரவாத கூட்டத்தை ஒழிப்பது தான் நமது நோக்கம்.
அணு குண்டு இருக்குனு பாகிஸ்தான் ஏமாத்துற விஷயத்தை பல தடவை சொன்னார்கள், அனைத்து நாடுகளும் இந்தியா எடுக்குற முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார்கள்
சிந்தூர் இரண்டுடன் இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இது பாகிஸ்தான் கையில தான் இருக்கு அவங்க மீண்டும் தீவிரவாத தாக்குதல் எங்கேயாவது சீண்டலோ நடத்துனாங்கன்னா இது தொடரும்

அனைத்து தீவிரவாத முகாம் அவங்களுடைய கூடாரங்கள் பயிற்சி மையங்கள் தங்குமிடங்கள் அழிக்கப்படும் வரை இந்த தாக்குதல்கள் தொடங்கும் என்பது நம்ம நாட்டு பிரதம மந்திரி நரேந்திர மோடி அறிவிப்பு கொடுத்துள்ளார.
ஆகவே மக்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டாம் அனைத்து ஏற்பாடும் மத்திய அரசாங்கம் செய்திருக்கு வடக்கே ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆரம்பிச்சு மேற்கே குஜராத் வரையிலும் அனைத்து எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கை கடற்படை வழியாகவும் தரைப்படை வழியாகவும் வான் படை வழியாகவும் பாதுகாப்பு தீவிரப்படுத்தி இருக்கு அதனால பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் பயப்பட வேண்டாம்.
ஆனால் பாதுகாப்பு படைகளுக்கு இதுபோல போர் நடக்கும்போது அவர்களுக்கு முன்னாள் படை வீரர்கள் உதவி செஞ்சுகிட்டு இருக்காங்க அதே பாரம்பரியத்தை இப்பவும் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்தால் இந்தியாவில் இருக்கிற அனைத்து முன்னாள் படை வீரர்கள் அமைப்புகள் தேவையான உதவிகளை செய்வோம் – தமிழ்நாடு உடைய இந்தியன் எக்ஸ் சர்வீசஸ் லீக் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.

தமிழ்நாட்டுல 10 வருஷமா பதவியில் இருந்த செல்லூர் ராஜு தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். இவர் படை வீரர்கள் சண்டை போட்டாங்களா என இழிவாக வன்மையாக கண்டிக்கக்கூடியது.
அவரின் இந்த கருத்தை கேட்டு அகில இந்திய அளவில் அனைத்து இந்நாள் முன்னாள் படை வீரர்கள் தமிழக இந்நாள்,முன்னாள் படை வீரர்கள் மனவேதனையில் உள்ளோம், செல்லூர் ராஜூ அவர் கருத்தை திரும்ப பெறணும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும். அப்படி இல்லன்னா அவருடைய கட்சி தலைமையிடம் நாங்கள் மனு கொடுத்து அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்துவோம்.
மேலும் மீண்டும் அவருக்கு சட்டசபையில் வாய்ப்பு கிடைச்சா முன்னாள் படை வீரர்கள் அவரை எதிர்த்து ஓட்டு கேட்டு அவரை தோற்கடிக்கிறதுக்கான அனைத்து நடவடிக்கையும் செய்வோம்,

செல்லூர் ராஜூ தனது கருத்து குறித்து தவறுதலாக செய்தி பரப்பப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, youtube ல பேஸ்புக்ல ரெக்கார்டு இருக்கு அவர் வாய்ஸ் அவருடைய அந்த குரல் இவரு சொன்னது தான் மறுக்க முடியாது. இப்போ சொல்லலேன்னு ஹிந்தில சொல்றது போல அந்தர்பல்டி அடித்து பேசுகிறார்.
செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுப்போம், ஏற்கனவே தமிழ்நாட்டுல அமைச்சரவையில் முன்னாள் முப்படை வீரர்கள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பல கமிட்டிகளுக்கு தலைவரா இருந்தவர் இப்படி பேசியது வருத்தமளிக்கிறது.

வருங்காலத்தில் எந்தவித பொது தேர்தலிலும் அவர் போட்டியிட்டால் அவருக்கு எதிராக நாங்கள் முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களை குடும்பத்தை சார்ந்தவர்கள் எதிர்த்து நாங்கள் அவர்களுக்கு வாக்கு அளிக்காதபடிக்கு நாங்கள் முயற்சி செய்வோம்.
மக்கள் பிரதிநிதியாக உள்ள செல்லூர் ராஜு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் மனு அளித்துள்ளோம்.

அதிமுக பொதுச் செயலாளருக்கு மனு அளித்துள்ளோம். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் ராஜினாமா செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளோம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இராணுவ படை வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
