செமஸ்டர் தேர்வுகள்.. புதிய தேதிகள் அறிவிப்பு : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 6:42 pm

செமஸ்டர் தேர்வுகள்.. புதிய தேதிகள் அறிவிப்பு : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

பேருந்து, ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வரை சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டிருக்கிறது. மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் (டிசம்பர் 3, 4) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் டிச.4ம் தேதி நடைபெற இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுகளும் ஒத்துவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிச.11ம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

  • Kayal Serial Actress Suicide Attempt ‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!