படையப்பா ரஜினிக்கு பதில் செந்தில் பாலாஜி… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2025, 1:43 pm

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் அவரது ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

இதையும் படியுங்க: அண்ணா அறிவாலயத்தில் வானதி சீனிவாசன்… கனிமொழியுடன் திடீர் சந்திப்பு!

அதில் “நான் யானை அல்ல, குதிரை… டக்குனு எழுவேன்” என்ற படையப்பா பட வசனத்துடன் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை இணைத்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

சமீபத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், தி.மு.க வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கோவையில் ஒட்டி உள்ள இந்த போஸ்டர்கள், அவர் விரைவில் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த போஸ்டர்கள் தற்பொழுது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்! 
  • Leave a Reply