காருக்குள் நடிகைக்கு பாலியல் தொல்லை… நடுரோட்டில் நண்பருடன் சண்டை ; கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார்!!

Author: Babu Lakshmanan
27 February 2023, 9:36 pm

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் இளம் ஜோடி சொகுசுகாரின் உள்ளே சண்டை போட்டதுடன், நடு ரோட்டில் இறங்கியும் சண்டை போட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக எஸ்எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா மகள் அங்கீதா பட்டாச்சாரியா என்பது தெரியவந்தது. துணை நடிகையான இவர், தனது ஆண் நண்பரான பீகார் மாநிலம் ராம்நகர் வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த மனோஜ் பாண்டே மகன் நிதிஷ்குமார் என்பவருடன் மும்பையில் இருந்து இருவரும், கோவையில் நடைபெற்ற ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, கோவையில் வாடகை கார் எடுத்து இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்க்க திட்டமிட்டு, நேற்று மதுரையில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று மாலை ராமேஸ்வரம் செல்ல தயாரான நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரே அறை எடுத்து தங்கிய நிலையில், தன்னிடம் நிதிஷ்குமார் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அதோடு தனது பணத்தையும் ஆண் நண்பர் நிதிஷ்குமார் எடுத்து கொண்டதாகவும் நடிகை அங்கீதா புகார் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறி, ஒருவருக்கொருவர் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.

இருவரையும் விசாரணை செய்த காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன், இருவரிடமும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து மதுரை வந்து சந்தியில் நின்று சண்டையிட்ட துணை நடிகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?