அதிகரிக்கிறதா Adjustment கலாச்சாரம்.? நேரடியாக கேட்பதாக சீரியல் நடிகை வேதனை..!

Author: Rajesh
12 April 2022, 10:37 am
Quick Share

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த திரைப்படம் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஜீவிதா. முன்னதாக பல சீரியல்களில் ஜீவிதா நடித்திருந்தாலும், கடை குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபகாலமாக பல நட்சத்திரங்கள் திரையுலகில் அவர்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை கூறி வரும் நிலையில், ஜீவிதாவும் அவர் சந்தித்த பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, ‘எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், நான் நடிக்கவில்லை. காரணம் நேரடியாக மேனேஜர்
அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்லி கேட்பார்.

அவங்க சொல்ற ஆட்களை எல்லாம் அனுசரித்துப் போனால் நல்ல கதாபாத்திரம், நல்ல சம்பளத்தில் நடிக்கலாம் என்று சொல்வார்கள். எல்லா ஆர்டிஸ்ட்க்கும் இது தான் நடக்குதுன்னு சொல்ல மாட்டேன். சில இடங்களில் இந்த மாதிரி பிரச்சனை உள்ளது. சிலர் நேரடியாக அட்ஜஸ்ட் பண்ண சொல்லி கேட்பார்கள். நான் முகத்துக்கு நேராக முடியாது என்று சொல்லி விடுவேன். அதனாலேயே பல வாய்ப்புகளை இழந்து விட்டேன்.

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் சினிமாவிலும் சீரியலிலும் நான் இதுபோன்ற பிரச்சனைகளை நிறைய சந்தித்து விட்டேன். நான் ரொம்ப தைரியமான பொண்ணு. அதனால் தான் என்னால் இவர்களை சமாளிக்க முடிகிறது. என்னிடத்தில் வேறு யாராவது இருந்தால் நிச்சயம் அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார்கள். இந்தத் துறையையே வேண்டாம் என்று முடிவெடுத்து இருப்பார்கள்’ என கூறியுள்ளார்.

நடிகை ஜீவிதா தற்போது யானை, காரி, கொடை போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் சின்ன வயது தனுஷிற்கு அம்மாவாக ஜீவிதா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 766

0

0