அமீர் கொடுத்த பரிசு.. வாங்க மறுத்த பாவனி.. அந்த வேலையை கச்சிதமாக முடித்த பிரபல தனியார் தொலைக்காட்சி..!

Author: Rajesh
20 July 2022, 12:08 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.

அது ஷோ பார்ப்பவர்கள் எல்லோரையுமே கலக்கமடைய வைத்தது. அதற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடி வருகின்றனர். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த வார பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனி அக்கா என்ட்ரி கொடுத்து அமீரை புகழ்ந்து, அமீருக்கு வாட்ச் ஒன்றை கிப்ட் செய்திருந்தார். சமீபத்தில், பாவனி தனது இன்ஸ்டா பக்கத்தில் அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடனான நெருக்கமான எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், அமீர் குறித்து பதிவிட்டு love you da எனவும் கூறினார்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசு ஒன்றை கொடுத்து கண்கலங்க வைத்துள்ளார். இதன் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் இறுதியில் அமீர் மோதிரம் ஒன்றையும் தருகிறார். அதே போன்று அதனை பாவனி வாங்காமல் தயங்கி நிற்பது போன்ற காட்சிகளும் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

Views: - 850

2

1