சீரியல் நடிகை உமா திடீர் மரணம்: அதிர்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள்!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 12:30 pm
Quick Share

மெட்டி ஒலி சீரியலில் 5 தங்கைகளில் ஒருவர் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்.

சன் டிவியில் கடந்த 2002-ம் ஆண்டு ஒளிபரப்பாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த சீரியல் மெட்டி ஒலி.

இன்று வரை அதை மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதன் டைட்டில் பாடலான ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ பாடல் பல பேரின் Favorite.

இந்த சீரியலை தற்போதைய Trending இயக்குனர் திருமுருகன் இயக்கி நடித்தும் இருந்தார். மேலும் இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, நீலிமா ராணி, போஸ் வெங்கட், விஷ்வா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதில் திருமுருகனின் ஜோடியாக, விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி என்பது குறிப்பிட தக்கது. இவருக்கு வயது 40. இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.

இவரது மறைவு சின்னத்திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 278

0

0