திருச்செந்தூர் கோவிலில் பெண் பக்தரிடம் பாலியல் சீண்டல்? அத்துமீறிய நபரை அடித்து ஓடவிட்ட பெண் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2025, 4:49 pm

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் கோவில் முன்புள்ள நாழி கிணறு செல்லும் பாதையில் அமைந்துள்ள மண்டபத்தில் பெண்மணி ஒரு ஆண் நபரை கம்பால் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்தப் பெண்மணி இரவு நேரத்தில் அங்கு இருந்தபோது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி அந்த பெண் அந்த நபரை கம்பால் கடுமையாக தாக்குகிறார்.

அங்கிருந்து கோவிலை நோக்கி செல்லும் அவரை அந்தப் பெண்மணி தொடர்ந்து பின்னால் சென்று கம்பால் கடுமையாக தாக்குகிறார்.

அதைத் தொடர்ந்து கோவில் வாசலின் காவலர்கள் தடுத்து நிறுத்தி என்ன ஏது என்று கேட்கின்றனர். அப்போது தன்னிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறி காவலர் முன்பே அந்த நபரை தாக்குகிறார்.

அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் அவர் இறந்தால் அதற்கு நீதான் காரணம் என்று அந்த பெண்மணியை எச்சரிக்கிறார். மேலும் அந்த நபரிடம் நான் நேற்று உன்னை அங்கிருந்து கிளம்ப சொன்னேன் அல்லவா என்று எச்சரிக்கிறார்.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு காவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!