RCB அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார்… எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2025, 11:56 am
பிரபல கிரிக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார் அளிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்க: கேட் கீப்பர் அலட்சியத்தால் பறி போன உயிர்கள்.. ரயில் – பள்ளி வேன் விபத்து குறித்து பகீர் தகவல்!
உபி மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள். இவருக்கு வயது 27. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளூர் அணிக்காக விளையாடி வந்த அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம் பெற்றார். இந்த தொடரில் பெங்களூரு அணி முதன்முறையாக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளுது. காஸியாபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்துள்ளார்.

அதில், பல நாட்கள் யாஷ் தயாளிடம் நட்பில் இருந்தேன், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை செக்ஸ் தொந்தரவு கொடுத்தார். இதனால் நான் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்.
ஆனால் இப்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், மனஉளைச்சலில் தற்பேது நான் உள்ளேன், இதனால் அவர்த மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ர். இதையடுத்து போலீசார் அப்பெண்ணிடம் இருந்து வாக்குமூலம் பெற்று வழக்குபதிவு செய்துள்ளனர். எந்த நேரத்திலும் யாஷ் தயாள் கைது செய்யப்படட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.