ஜெபக்கூட்டத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் பாதிரியார் கைது..!!

Author: Aarthi Sivakumar
12 August 2021, 1:48 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரைட்டான்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு சிவகாசியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் கிறிஸ்துதாஸ் என்பவர் வீடு தோறும் சென்று ஜெபக் கூட்டங்களை நடத்தி வந்தார்.

அப்போது 11 வயது சிறுமிக்கு பாதிரியார் கிறிஸ்துதாஸ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் கிறிஸ்துதாசை கைது செய்தனர். ஜெபக்கூட்டம் நடத்திய பாதிரியார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 356

0

0