தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… குளத்தில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி : காப்பாற்ற சென்றவருக்கும் நேர்ந்த கதி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2022, 5:38 pm

தேனி : கடலூர் சம்பவத்தை தொடர்ந்து குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு பேரையூர் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 24), மீனம் பட்டியை சேர்ந்த சபரிவாசன் (வயது 10), நிலக்கோட்டை சேர்ந்த மணிமாறன் (வயது 10), நிலக்கோட்டை சேர்ந்த ருத்ரன் ஆகிய 4 பேரும் பாபிபட்டி குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது இவர்கள் நான்கு பேரில் ஒருவர் தண்ணீரில் தவறி விடவே அவரை காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாக மீதமுள்ள மூன்று பேரும் குளத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் குளத்து நீரில் மூழ்கி பன்னீர்செல்வம், சபரிவாசன், மணிமாறன் ஆகிய 3 பேரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற போது ருத்ரன் என்ற 7 வயது சிறுவனை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்நிலையில் பெரியகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மொத்தம் நான்கு பேரையும் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் மூன்று பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ருத்ரன்தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!