சாலையை கடந்த சிறுவன் மீது டிப்பர் லாரி மோதும் அதிர்ச்சி வீடியோ : கடைசியில் நடந்த டிவிஸ்ட்!!

9 July 2021, 2:27 pm
Accident CCTV- Updatenews360
Quick Share

வேலூர் : சாலையை கடக்க முயன்ற 1ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மீது மினி டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியில் பலமனேரி நெடுஞ்சாலையில் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி அருகே 1 ம் வகுப்பு படிக்கும் 6 வயது பள்ளி மாணவன் ஒருவன் அவனுடைய சகோதரியுடன் சாலையில் நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது ஜல்லி ஏற்றி வந்த மினி டிப்பர் லாரி வேகமாக மோதியது. இதனால் அங்கு இருந்தவர்கள் பதட்டத்துடன் ஓடி சென்று பார்த்த போது சிறு காயங்களுடன் மாணவன் லாரிக்கு அடியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.

இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடைபெறுவதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 393

0

1